ரஷ்யாவின் வான் படை தாக்குதலில் 66 பேர் உயிரிழப்பு!
Saturday, December 30th, 2017
ரஷ்ய நாட்டு வான் படைகள் சிரியாவில் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பொதுமக்கள் உட்பட 66 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா நாட்டின் இப்லிப் மாகாணத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு அரசுப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.அவர்களுக்குத் துணையாக ரஷ்ய நாட்டின் போர் வானூர்திகளும் வான்வழித் தாக்குதலை நடத்துகின்றது.
இந்நிலையில் ஹாமா மற்றும் இப்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதிகளில் ரஷ்ய வான்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தியதாக்குதல்களில் 19 பொதுமக்கள் உட்பட 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று சிரியாவில் இயங்கிவரும் பிரிட்டனைச் சேர்ந்த மனிதஉரிமைகள் கண்காணிப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் நடந்துவரும் போரினால் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதோடு பல லட்சம் மக்கள்உயிருக்குப் பயந்து நாட்டைவிட்டு தப்பியோடி உள்ளனர்.
Related posts:
|
|
|


