ரஷ்யாவின் வான்வழி தாக்குதலில் சிரியாவில் 26 பேர் பலி!

சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள குறித்த சில பகுதிகளில் சிரிய அரசாங்கத்தின் சார்பில் ரஷ்ய மற்றும் அமெரிக்க இராணுவ படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றன.
இந்த நிலையில், கிழக்கு சிரியாவில் ஈராக் எல்லையில் அமைந்துள்ள அபு கமல் என்ற நகரத்தை மீட்பதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பயனாக குறித்த நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டது
இதன்போது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் ஒன்றில 9 குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் உயிரிழந்ததாக பிரித்தானிய மனித உரிமை கண்கானிப்பு அமைப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். பொதுமக்கள் முகாம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்!
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்!
நீரில் மூழ்கும் அபாயத்தில் இந்தோனேஷியாவின் தலைநகர் !
|
|