ரஷியா – இந்தியா விமானப் பணியாளர்களுக்கு விசா இன்றி நுழைய அனுமதி!

ரஷியா மற்றும் இந்தியாவை சேர்ந்த விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 1200 விமானங்கள் ரஷியாவுக்கு செல்கின்றன. அதேபோல், ரஷியாவில் இருந்து ஆண்டுதோறும் 1100 விமானங்கள் இந்தியாவுக்கு செல்கின்றன. இவற்றில் பெரும்பாலான விமானங்கள் கோவா நகருக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வருகின்றன என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இரு நாடுகளில் இருந்தும் வந்துசேரும் அரசு அங்கீகாரம் பெற்ற விமான நிறுவனங்கள், தனியார், ஒப்பந்த விமானங்களை செலுத்தி வரும் விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இரு நாடுகளுக்குள் விசா இன்றி நுழையவும், தங்கவும் அனுமதி அளிக்கும் ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமானது.
Related posts:
முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை!
இ-சிகரெட் விற்பனைக்கு தடை!
IMF இன் முகாமைத்துவ பணிப்பாளராக மீண்டும் தெரிவானார் கிறிஸ்டலினா ஜார்ஜீவா!
|
|