பாடசாலை சிறார்களுக்கு அரசின் புதிய பாதுகாப்பு நடவடிக்கை!

Friday, September 2nd, 2016

சமீபத்தில் நடந்த ஜிகாதி தாக்குதலுக்குப் பிறகு புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், 12 மில்லியன் பிரெஞ்சு நாட்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு திரும்பியுள்ளனர்.

தாக்குதல் நடந்ததால் அவர்கள் எவ்வாறு ஒளிந்து கொள்ள வேண்டும், தப்பிக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று பள்ளிக்கூட மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஓர் ஆண்டில் மூன்று முறை பாதுகாப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். அதில் தாக்குதல் நடப்பது போன்ற ஒத்திகை நிகழ்வுகளும் நடத்தப்படும்.

பள்ளிகளில் தொடர்ச்சியாக ரோந்து நடத்தப்படும் மற்றும் பள்ளிகளின் நுழை வாயில்களும் பாதுகாப்பானதாக இருக்கும். கடந்த ஆண்டில் பாரிசில் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியவாத தாக்குதல் நடந்தது. அதில் 130 பேர் கொல்லபட்டனர். அந்த சம்பவம் நிகழ்ந்தது முதல் பிரான்ஸில் அவசர நிலை அமலில் உள்ளது.

160901073533_france_school_640x360_evgeniyarudenko_nocredit

Related posts: