ரய்ஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Monday, March 21st, 2016
ரய்ஷியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியை இன்று(21) சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.
அமெரிக்காவையும், ரய்ஷியாவையும் பிரிக்கும் ம்சாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியின் அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உண்டான உயிர் மற்றும் பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என செய்திகள் கூறுகின்றன.
Related posts:
ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி வாழ்க்கைக் குறிப்புகள்.............!
பிரதமர் மேயின் திட்டம் திருப்புமுனையாக அமையாது - அங்கெலா மேர்க்கல்!
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்
|
|
|


