ரயில் விபத்து : ஆந்திர மாநிலத்தில் 41 பேர் உயிரிழப்பு!
Monday, January 23rd, 2017
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 40இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.இந்த ரயில் விபத்தினால் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில ரயில்கள் வேறு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபா வழங்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனைத்தவிர, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர பிரதேஷ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
அமெரிக்க டொலர்களை சேமிப்பதற்கு புடினின் தீர்மானம் உதவியது - ட்ரம்ப்
துப்பாக்கிச் சூடு; மெக்சிகோவில் 8 பேர் பலி!
அடுத்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு புட்டினிற்கு அழைப்பு விடுக்கப்படும் - பிரேசில் ஜனாதிபதி லூயி...
|
|
|


