யேமனில் மோசமான வாந்திபேதி நோய் –  ஐ.நா

Sunday, June 25th, 2017

உலகின் எந்த நாட்டிலும் இதுவரை இல்லாத வகையில் யேமனில் மோசமான வாந்திபேதி நோய் பரவல் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த பயங்கர விடயம் குறித்து தமது கவலையினை வெளியிட்டுள்ளனதற்போது 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், ஆயிரத்து 300 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் இரு ஸ்தாபனங்களும், வாந்தி பேதியினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான பல்வேறு வழிகளை மேற்கொள்ளுகின்ற போதிலும், நோய் தொற்று மேலும் பரவி வருவதாக குறிப்பிட்டுள்ளது

நாளாந்தம் 5 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உட்படுவதாக சுகாதார தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.யேமனில் கடந்த இரு வருடங்களாக இடம்பெறும் கடும் யுத்தம் காரணமாக குடிநீர் மாசுபட்டுள்ளதுடன் சுகாதார நிலைமை கட்டுக்கடங்காமல் வீழ்ச்சியினை அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவ மனைகளில் நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவ தரப்பினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஇது தவிர, உணவு பற்றாக்குறை மற்றும் போஷாக்கின்மை காரணமாக அதிக அளவிலான சிறார்கள் பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது யேமனில் பரவி வரும் இந்த வகையிலான வாந்தி பேதிக்கு உடனடியான உரிய சிகிச்சை வழங்கப்பட தவறும் பட்சத்தில், தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் சில மணி நேரத்திலேயே மரணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: