யெமனில் போர் நிறுத்தம் வியாழனன்று அமுல்!
Tuesday, October 18th, 2016
யெமனில் வரும் வியாழக்கிழமையிலிருந்து அமுலாகவுள்ள மூன்று நாள் போர் நிறுத்தத்தை வெளிநாட்டில் இருந்து இயங்கும் யெமன் அரசாங்கமும் ஷியா ஹூத்தி கிளர்ச்சியாளர்களும் மதிக்க இணங்கியுள்ளனர்.
ஐ.நா. மன்றம் மத்தியஸ்தம் செய்து கொண்டு வந்த இந்த ஒப்பந்தம், ஏமன் நாட்டு மக்கள் மேலும் இரத்தம் சிந்துவதிலிருந்து பாதுகாக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம். ஆனால் முந்தைய போர்நிறுத்த ஒப்பந்தங்கள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
ஏமனில் நடக்கும் சண்டை, இரண்டு பிராந்திய சக்திகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியாவை இந்த மோதலில் தலையிடச் செய்துள்ளது.இரான் ஷியா பிரிவை ஆதரிக்கிறது. சவுதி அரேபியா அதிபர் அப்தராபா மன்சூர் ஹாடியை மீண்டும் பதவியில் அமர்த்த முயலும் சர்வதேச கூட்டணியை வழிநடத்துகிறது.

Related posts:
சிரியாவும் ரஷ்யாவும் போர்களத்தில் முன்னேறும் நிலையில் தாராளகுணத்தை காட்ட கெர்ரி அறிவுறுத்தல்!
கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!
அமெரிக்கா மீது பிரான்ஸ் அதிருப்தி!
|
|
|


