யாரையும் பழிவாங்க மாட்டேன் – கருணாநிதி

Sunday, May 15th, 2016
தமிழக சட்டப் சபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் யாரையும் பழிவாங்காத நல்லாட்சி தான் நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மாலை 5 மணியளவில் நடந்த பொதுக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து பேசிய கருணாநிதி, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா பயப்பட வேண்டியதில்லை. அவரை நான் பழிவாங்குவேனோ என்று அவர் பயப்பட வேண்டாம். அண்ணா அவர்கள் பழிவாங்குவது என்னவென்று எனக்கு கற்பிக்கவே இல்லை. பழிவாங்குவது என்னவென்பதை அறிஞர் அண்ணா எனக்கு கற்றுக் கொடுக்காததால் நான் பழிவாங்கமாட்டேன்.

ஏன் இதனை நான் சொல்கிறேன் என்றால் 2001ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் நள்ளிரவில் என்னை காவல்துறையினர் கைது செய்தனர். என்னை அப்போது கொல்லவும் முயற்சி நடந்தது என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் முதல்வரானால் நிச்சயம் யாரையும் பழிவாங்க மாட்டேன்.

தி.மு.க செயல்படுத்திய நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது பழிவாங்கும் செயலாக இருந்தால் இந்த கருணாநிதி அந்த வகையில் பழிவாங்குவதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.- என்றார்.

Related posts: