மோட்டார் வாகன மாசு சோதனைகளில் ஜெர்மனி அரசு அலட்சியம்!

Sunday, August 28th, 2016
சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் மாசு கட்டுப்பாடு  சோதனைகளில் ஏமாற்றி வருவதாக செய்த எச்சரிக்கைகளை அரசு அலட்சியப்படுத்திவிட்டதாக ஜெர்மனியில் உள்ள சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மனிய மோட்டார் வாகன பயன்பாட்டாளர் சங்கத்தினர் பேசுகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மாசு கட்டுப்பாடு சோதனைகளில் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியம் குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கவலை தெரிவித்ததை சுட்டிக்காட்டினர்.
நாடாளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழல் இயற்பியல் துறையில் நிபுணரான ஹைடெல்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டெனிஸ் ப்போலர் என்பவர் அரசின் அலட்சியபோக்கால் ஜெர்மனியின் ஆட்டோமொபைல் தொழிலுக்கு மிகுந்த ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்

Related posts: