மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்திய புடின்!

ஜோர்ஜியாவின் தன்னாட்சி குடியரசான அப்காசியாவிற்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அங்கு மொஸ்கோவின் இராணுவ ஆதரவை உறுதிபடுத்தினார்.
ஜோர்ஜிய தலைநகர் திபிலீசிற்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜோர்ஜிய பிராந்தியத்தில் ரஷ்யாவின் இருப்பிற்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ரஷ்ய ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்திருந்தது.
இதன்போது அப்காசிய ஜனாதிபதி சந்தித்து உரையாற்றிய புடின், அப்காசியாவின் மக்களை பாதுகாப்பதற்காக ரஷ்ய- அப்காசிய கூட்டு இராணுவக் குழுவொன்றை கட்டமைப்பதில் மொஸ்கோ உறுதியாகவுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மேலும், அப்காசியாவின் பாதுகாப்பு, தன்னிறைவு மற்றும் சுயாதீனம் என்பவற்றுக்கு தாம் உத்தரவாதம் அளிப்பதுடன், அவை தொடரும் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
Related posts:
தேவாலயத்தில் கொலைவெறி தாக்குதல்: அமெரிக்காவில் 27 பேர் பலி!
பாரிய அழிவை நோக்கி சமுத்திரம் .!
மருத்துவ உலகை அச்சுறுத்தும் கொரோனா: இருவரை அமெரிக்காவில் 80 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்!
|
|