மைதானத்தில் குண்டு வெடிப்பு:  எட்டு பேர் உடல் சிதறி பலி – ஆப்கானிஸ்தானில் சம்பவம்!

Monday, May 21st, 2018

கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று ஆப்கானிஸ்தானிவ் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் உள்ள ஸ்பின்கர் மைதானத்தில் ரம்ஜான் கிண்ணத்திற்கான சிறப்பு போட்டி கடந்த மே 18-ம் திகதி இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியை காண நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.

போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே எதிர்பாராத விதமாக மைதானத்தின் உள்ளே பெரும் சத்தத்துடன் இரண்டு குண்டுகள் வெடித்தன.

அடுத்த சிறிது நேரத்தில் மைதானத்துக்கு வெளியிலும் இரண்டு குண்டுகள் வெடித்தன.  இந்தப் குண்டு வெடிப்பினால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜலாலாபாத் நகரின் துணை மேயர் மற்றும் போட்டியின் அமைப்பாளர் ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர்.

 தகவல் அறிந்து சம்பவ இடதுக்கு வந்த பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்த அந்நாட்டு அதிபர் தெரிவித்ததாவது, “ புனிதமான ரம்ஜான் மாதத்தில் எம் மக்களைப் பயங்கரவாதிகள் கொல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. விளையாட்டு மைதானம் எனவும் பார்க்காமல் குண்டு வெடிப்பு நிகழ்த்தியுள்ளனர். இதிலிருந்து, பயங்கரவாதிகளுக்கு எந்த மதங்களும் கிடையாது. அவர்கள் மனிதாபிமானத்துக்கு எதிரானவர்கள் மட்டுமே, என்பது நிரூபணமாகியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தான் தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தச் தொடர்பும் இல்லை எனத் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: