மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !

Wednesday, September 1st, 2021

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த தலிபான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் டோஹாவில் இடம்பெறுகின்றது.

இடமாற்றத்திற்கு தகுதியான 150 முதல் 250 பேர் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கூறியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கீகாரம் பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் உறுதியளித்திருந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பிரஜைகள் உட்பட 17,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

Related posts: