முன்பக்கச் சக்கரங்கள் இயங்க மறுப்பு – மியன்மார் ஏர்லைன்ஸ் விபத்து!
Monday, May 13th, 2019
மியன்மார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி தரையிறக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் முன்பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே விமானம் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது விமானத்தில் 7 பணியாளர்கள் உட்பட 89 பேர் பயணித்துள்ளதுடன், இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
Related posts:
எல்லையில் படைகளை குறைத்தது இந்தியா!
நேரில் பார்த்தோம் - இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 474 வெளிநாட்டினர் கைது!
|
|
|


