முன்னாள் பிரதமருக்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை!
Saturday, May 12th, 2018
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அவரின் மனைவி ரொஸ்மா மன்சூர்க்கு நாட்டில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்சிக்காலத்தில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெறவில்லை என அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை முன்னாள் பிரதமர் தமது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் தமக்கு நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகளை மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது குடும்பத்துடன் ஒருவாரகாலம் வெளிநாடு செல்லவுள்ளதாக முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பட்டம்-ரெயில் மறியல் தமிழகத்தில் பாதிப்பு இல்லை!
துருக்கியின் அஃப்சின் பகுதியில் நிலநடுக்கம்!
நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் - சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து!
|
|
|


