முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார்!
Friday, May 18th, 2018
கர்நாடக மாநிலத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். அவர் ஆளுநர் வாஜுபாய் வாலா முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் வைத்தார்.
அண்மையில் இடம்பெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனத்தாக கட்சிக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்குமாறு, மாநில ஆளுநரிடம் எடியூரப்பா கோரியிருந்தார்.
இதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஹூல் காந்தி நேற்று உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு நேற்று இரவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேளை, ஆளுநரின் முடிவில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் அறித்ததுடன், ஆளுநரின் செயற்பாடுகள் நீதிமன்றின் கண்காணிப்பின் கீழேயே இருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சபாநாயகர் மைக் மீண்டும் உடைப்பு: 3 மணிக்கு அவை ஒத்திவைப்பு!
8 குழந்தைகள் உயிரிழப்பு!
வடகொரியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு!
|
|
|


