முடிசூட்டிக்கொள்ள ஒரு வருட கால அவகாசம் கோரும் தாய்லாந்தின் இளவரசர்!

தாய்லாந்து அரசர் பூமிபோன் காலமானதை அடுத்து பட்டத்திற்குரிய இளவரசர் மகா வஜிரலங்கோன், தனது முடிசூட்டு விழாவை ஒரு வருட காலம் கழித்து வைத்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக தாய்லாந்தின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
64 வயது இளவரசர், அரசராக இன்னும் தயாராக வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் இளவரசரின் திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன என பிபிசியின் பாங்காக் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அவரின் முடிசூட்டு விழா, தாமதமாவதற்கான காரணம் அது தானா என்பதும் தெளிவாக தெரியவில்லை.முன்னதாக புதிய மன்னர் அரியணை ஏறும் காலம் வரையில், காலமான அரசருக்கு நெருங்கிய ஆலோசகரான, 96 வயது ப்ரேம் டினசுலானன் அரசப் பிரதிநிதியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Related posts:
மத்திய ஆசியாவில் நீருக்காக போர் வரும்?
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல்!
புடினுக்கு தக்க பதிலடி - பைடன் கடும் எச்சரிக்கை!
|
|