முக்கிய வர்த்தக உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகல்!

Wednesday, January 25th, 2017

டிரான்ஸ் பசிபிக் கூட்டு வர்த்தக உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்ளும் உத்தியோகபூர்வ நிறைவேற்று அதிகார ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

தனது ஓவல் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த ஆணையில் கையெழுத்திட்ட டிரம்ப், இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு சிறந்த விடயமாகும் என்றார்.

டீ.பீ.பீ என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசில் ஏற்படுத்தப்பட்டபோதும், அமெரிக்க கொங்கிரஸ் அதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. 2015 இல் 12 நாடுகள் கையொப்பம் இட்ட இந்த ஒப்பந்தம் இதுவரை அமுலுக்கு வராத நிலையில் அமெரிக்காவின் விலகள் இதனை செயற்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை முறியடிக்கும் வகையில் ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளை முன்னிலைப்படுத்தியே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதில் கையொப்பமிட்டிருக்கும் அவுஸ்திரேலியா, பிருனாய், கனடா, சிலி, ஜப்பான், மலேஷியா, மெக்சிகோ, நியூஸிலாந்து, பெரு, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகள் உலகப் பொருளாதாரத்தில் 40 வீதத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாகும்.

download

Related posts: