மீண்டும் வெடித்தது சர்ச்சை: தோண்டப்படுமா ஜெயலலிதாவின் உடல்?

Monday, August 14th, 2017

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்குகள் எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த மியான்ஜான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் தேக ஆரோக்கியத்துடனேயே  காணப்பட்டதாகவும், அவருடைய சிகிச்சை விபரங்கள் தெரிவிக்கப்பட வில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவே அவருடைய உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட வேண்டும் எனவும் மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தநிலையில் நேற்றைய தினம் மியான்ஜானின் மனுவினை ஆராய்ந்த இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகிய நீதிபதிகள் ஏற்கனவே உள்ள மூன்று வழக்குகளுடன் சேர்த்து ஒக்டோபர் 23 ஆம் இந்த வழக்கும் விசாரணைச் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

Related posts: