மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா!
Tuesday, July 23rd, 2019
வெனிசூலா நாட்டில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெனிசுலாவின் தலைநகர் கரகாசிலுள்ள மின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்தடை காரணமாக தலைநகரில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதமும் இதுபோன்ற மின்தடை நாடளாவிய ரீதியில் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலியா நாடாளுமன்றம் கலைப்பு!
சோதனை ஓட்டத்தில் உலகின் நீளமான விமானம் விபத்து!
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: இந்திய பிரதமர் அமைச்சர்களுடன் விசேட ஆலோசனை!
|
|
|


