மீண்டும் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!
Monday, December 24th, 2018
இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்ற மக்களை அவதானமாக இருக்குமாறு அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சுண்டா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகாட்டோ எரிமலை மீண்டும் வெடிக்கும் நிலையில் இருப்பதால், அங்கு மீண்டும் ஆழிப்பேரலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு குறித்த எரிமலை வெடித்தமையால் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சுமார் 225 பேர் பலியானதோடு, மேலும் 843 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த எரிமலையின் செயற்பாடுகள் கடலுக்கு அடியில் இடம்பெறுவதால், இவ்வாறான பாரிய அலைகளை ஏற்படுத்துகிற, இந்நிலையில் மீண்டும் அங்கு ஆழிப்பேரலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதனால் இலங்கைக்கு தாக்கம் ஏற்படாது என்று நேற்றையதினம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐரோப்பாவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி - ஐக்கிய நாடுகள் சபை!
மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி
மலேசியா நாட்டின் மன்னர் பதவி இராஜினாமா!
|
|
|


