மீண்டும் இத்தாலியை புரட்டியெடுத்த சக்தி வாய்ந்த பூகம்பம்!

Thursday, October 27th, 2016

இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பூகம்பத்தால் 300 பேர் கொல்லப்பட்ட இடத்துக்கு அருகே, மத்திய இத்தாலியில் இரண்டு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பூகம்பங்களும், 5.4 மற்றும் 6 என்ற அளவில், பெருகியா நகருக்கு அருகே ஏற்பட்டன.சில கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள நகரங்களின் மேயர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் காயமடைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், பகல் வெளிச்சத்தில்தான் பாதிப்பின் முழுமையான விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

சக்தி வாய்ந்த இரண்டாவது பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பு பலர் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிகிறது.

_92106636_c531820f-035e-4b37-b750-67db5ec22c7c

Related posts: