மியன்மாரின் பங்களாதேஷ் எல்லையை ஒட்டி இராணுவம் குவிப்பு!

Tuesday, October 11th, 2016

மியன்மார் தனது பங்களாதேஷ் எல்லையை ஒட்டிய முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்திற்கு இராணுவத்தை அனுப்பியுள்ளதோடு அங்கு நான்கு பொலிஸாரை கொலை செய்த ஆயுததாரிகளை பிடிக்க தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளது.

கடந்த ஞாயிரன்று இடம்பெற்ற வெவ்வேறு மூன்று தாக்குதல்களின் பின்னணியில் சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்கள் இருப்பதாக மியன்மார் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதன்போது பல டஜன் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் எல்லை காவல் படையால் கைப்பற்றப்பட்டது.

இந்த தாக்குதல்களில் ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்்டு ஐவர் காயமடைந்தனர். மேலும் ஒரு பொலிஸார் காணாமல் போனார். இதில் எட்டு தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டு மேலும் இருவர் பிடிபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மியன்மாரின் பெரும்பாலும் நாடற்ற நிலையில் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ரொஹிங்கியாக்கள் தாக்குதல்கள் இடம்பெற்ற ரகினே மாநிலத்தில் அதிக சனத்தொகையுடன் வாழ்கின்றனர். இந்நிலையில் ரகினே மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையிலான துருப்பினர் குவிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

coltkn-10-11-fr-09160335569_4872394_10102016_mss_cmy

Related posts: