மின்னல் தாக்கத்தில் சிக்கி 50 பேர் பலி!
Wednesday, May 30th, 2018
வட இந்தியாவில் ஏற்பட்ட மின்னல் தாக்கங்களால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிய காற்று மற்றும் மின்னல்தாக்கங்களால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிக பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தங்களால் இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் 20க்கும் மேற்பட்ட மரண சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை அண்மையில் வடக்கு இந்தியாவில் மின்னல்தாக்கம் மற்றும் புழுதிப் புயல்காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பானில் நிலநடுக்கம் !
பர்கா அணிய சுவிஸ்சர்லாந்தில் தடை!
ஆப்கானிஸ்தானில் விவாகரத்தான பெண்களை மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழுமாறு தலிபான்கள் அதிரடி உத்தரவு!
|
|
|


