மாலைத்தீவில் அவசரகாலநிலை பிரகடனம்- 139 பேர் கைது!

Monday, March 19th, 2018

மாலைத்தீவில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மாலைத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்திருந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே, அதிபர் அப்துல்லா யாமீன் வீட்டுக்காவலில் வைத்தார். மேலும், முன்னாள் அதிபர் மவுமீன் அப்துல் கயூமையும் பொலிசார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி நாடு முழுவதும் அவசரகாலநிலையை பிரகடனம் செய்து அதிபர் யாமீன் உத்தரவிட்டார். இதனால், அரசு அலுவலகங்கள் அனைத்தும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த அவசரகாலநிலை பிரகடனம் மார்ச் 25 ஆம் திகதியுடன் முடிவடையாவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாலைத்தீவில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அந்நாட்டின் அவசரகாலநிலை விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

Related posts: