மாலைதீவு ஜனாதிபதியாக சாலிக் பதவி ஏற்பு!
Monday, November 19th, 2018
அண்மையில் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்றார்.
தலைநகர் மலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய அதிபராக பதவியேற்ற இப்ராகிம் முகமது சாலிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கும் சாலிக்குக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாலைதீவின் கட்டுமானம், சுகாதார மேம்பாடு, மற்றும் மனித வள மேம்பாட்டு வளர்ச்சியில் இந்தியாவும் இணைந்து பணியாற்ற விரும்புகிறது. தங்களது பணியை திறம்பட ஆற்றும்படி வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மாலைதீவு செல்வது இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


