சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் பலி!
Sunday, May 6th, 2018
மியன்மார் நாட்டின் வடபகுதியில் உள்ள பச்சை மாணிக்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மியன்மார் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்துகுட்பட்டவாக் கர் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் பல தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அந்த சுரங்கத்தின் பாறை ஒன்று உருண்டு கீழே விழுந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
50 ஆண்டு கால மோதலுக்கு முற்றுப்புள்ளி!
பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்!
ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி!
|
|
|


