மாணவர் தலைவர் குற்றவாளி என தீர்ப்பு?

Friday, July 22nd, 2016

சட்டவிரோதமாகக் கூடிய வழக்கில், முக்கிய மாணவர் தலைவரான ஜோஸுவா வாங் குற்றவாளி என ஹொங்காங் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அவரது தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டெம்பர் 26-ம் திகதி மாலை, சிவிக் சதுக்கம் எனப்படும் அரசு அலுவலக வளாகத்தில் ஏறியதாக அலெக்ஸ் செள மற்றும் லாதன் லா ஆகியோருடன் ஜோஸுவா வாங்கும் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களது நடவடிக்கையால், ஜனநாயகத்துக்கு ஆதரவாக பெருமளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதனால், ஹாங்காங் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. பத்தொன்பது வயதான ஜோஸுவா வாங், தீர்ப்புக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது நெடிய போராட்டம் என்று தெரிவித்தார்.

Related posts: