மழை நீரை அதிகளவில் சேமிக்க வேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Tuesday, March 23rd, 2021

மழை நீரை அதிகளவில் சேகரித்தால் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலைமையை மாற்றலாம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக நீர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழை நீரை சேகரிப்போம் என்ற பிரச்சாரத்தை காணொலியில் ஆரம்பித்து வைத்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஜல் ஜீவன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மிகவும் குறுகிய காலத்தில் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் அதேவேளையில் தண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் நீரின் பெறுமதியை உணர்ந்த மழை நீரை சேகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சுயசார்பை எட்டுவது நமக்கு கிடைக்கும் நீரின் அளவை பொறுத்து இருக்கும். எனவே தான் மத்திய அரசு நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது’ எனவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: