மழலையர் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து – 02 குழந்தைகள் உயிரிழப்பு!
Friday, May 10th, 2019
ஜப்பானில் மழலையர் பாடசாலையில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாடசாலையின் சேர்ந்த ஆசிரியர்கள் 10-க்கும் மேற்பட்ட மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு அருகே உள்ள சாலையோர நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று மற்றொரு கார் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி, கார் சாலையோரமாக நடந்து சென்ற மழலையர் பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 02 குழந்தைகள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் 03 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்துக்கு காரணமான 02 கார் சாரதிகளை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
600 முறை அத்துமீறிய பாகிஸ்தான் – இந்தியா!
மலேசியா நாட்டின் மன்னர் பதவி இராஜினாமா!
ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்கு இருக்கும் ஆணு ஆலை - ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
|
|
|


