மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை ஒருதலைபடசமானது  -ரஷ்யா குற்றசாட்டு!

Thursday, September 29th, 2016

நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 2014 ஜூலை மாதம் 17ஆம் திகதி சென்றபோது  ரஷியா எல்லைப் பகுதி அருகே உக்ரைனில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த  298 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். MH17  விமான விபத்து  குறித்து  சர்வதேச விசாரணை நடைபெற்று வருகிறது.

விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து கிடைத்த சில துண்டுகள் ரஷ்யாவின் தரையில் இருந்து வானத்தில் தாக்கும் பக் (BUK) ஏவுகணை பாகங்களுடன் ஒத்துபோவதாக ஏற்கனவே தெரியவந்தது.

விமானத்தை ரஷ்யா ஆதரவு பிரிவினைவாதிகள் தான் சுட்டு வீழ்த்தினர் என குற்றம் சாட்டபட்டது அதற்கு ஆதாரபூர்வமான சான்றும் (ஏவுகணை பாகம்) கிடைத்தது. ஆனால் அதற்கு பதிலாக ரஷியா மேற்கத்திய நாடுகளை குற்றம் சுமத்தியது.

இந்நிலையில் எம்எச் 17 விமானம் ரஷியா வழங்கிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று விசாரணை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.  ஆனால் இது ஒரு தலைபட்சமான  விசாரணை என ரஷ்யா குற்றம்சட்டி உள்ளது. அது அரசியல் உள்நோக்கத்துடன் இருப்பதாகவும். புலனாய்வு நடக்கும் விதம் மாறவில்லை என்பதில் ஏமாற்றம் அடைந்திருப்பதாகவும் ரஷ்யா கூறி உள்ளது.

எந்தவித ரஷ்ய ஏவுகணைகளு  உக்ரைன் பகுதியில் செலுத்தப்படவில்லை என்றும் ரஷியத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. விசாரணையில் ரஷ்யா சேர்த்துக்கொள்ளப்படவில்லை விசாரணையில் உக்ரேனின் தாக்கம் இருப்பதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியது.

800 copy

Related posts: