மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் சோதனை!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அவர் தேர்தலில் தோற்ற ஒரு வாரத்துக்கு பின் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.அவரின் வீட்டின் முன் வாகனங்கள் ரோந்து வந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தனது முன்னாள் கூட்டாளி மீதான ஊழல் விசாரணைகளை மீண்டும் தொடங்க போவதாக புதிய பிரதமர் மஹதீர் முகமத் தெரிவித்திருந்தார்.ஆனால், தான் எந்த குற்றமும் இழைக்கவில்லை என நஜிப் தெரிவித்துள்ளார். நஜிபுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்போருக்கு இடமில்லை - அவுஸ்திரேலியா!
ரஷ்யாவின் தடை தொடர்பிலான விஷேட கலந்துரையாடல்!
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 474 வெளிநாட்டினர் கைது!
|
|