மற்றும் ஒரு கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை – தொடரும் ஆர்ப்பாட்டங்கள்!

Sunday, June 14th, 2020

அமெரிக்காவில் மற்றும் ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் சுட்டுக்கொல்லப்பட்டார். உணவகம் ஒன்றில் தனது சிற்றூந்தில் உறங்கிக்கொண்டிருந்த ஆபிரிக்க-அமெரிக்கர் ஒருவரே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரேஷார்ட் ப்ரூக்ஸ் என்பவரே நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து அட்லான்டாவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் அட்லாண்டா காவல்துறைத் தலைவர் எரிகா ஷீல்ட்ஸ் தமது பதவியில் இருந்துவிலகியுள்ளார்.

ஏற்கனவே ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணம் தொடர்பில் அமெரிக்க முழுவதும் எதிர்ப்பு வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த ஆபிரிக்க அமெரிக்கரை கைதுசெய்ய முற்பட்டபோது அவர் காட்டிய எதிர்ப்பின்போதே காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: