மனித கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு உலங்குவானூர்தி வழங்கும் இத்தாலி!
Thursday, January 26th, 2023
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலி அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (25) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோது இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது மற்றும் இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இத்தாலி வழங்கக்கூடிய ஆதரவு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது
000
Related posts:
வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகவில்லை: பரீட்சைகள் ஆணையாளர்!
நாடு மீண்டும் முடங்கும் அபாயம் - கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் எச்சரிக்கை!
புதிய ரயில் பாதை வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!
|
|
|


