மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரயிலில் குண்டுவெடிப்பு!

மத்திய பிரதேச மாநிலம் போபால் - உஜ்ஜைன் பகுதியில் பயணிகள் ரயிலில் காலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது எண்பது பயணிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை உஜ்ஜைன் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் ஜப்தி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலின் பொதுப்பெட்டியில் திடீரென குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ரயில் பெட்டியின் கண்ணாடி ஜன்னல்கள், மின்விசிறிகள் சேதமடைந்ததுடன் 9 பயணிகள் காயம் அடைந்ததாகவும் புகையிரதசேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் புகையிரதசேவைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
சீன விமான நிலையத்தில் தீ இருவர் உடல் கருகி சாவு
மகாராணியிடம் உதவி கேட்ட 5 வயது சிறுமி: மறுத்த மகாராணி!
எண்ணெய் நிறுவனத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் -லிபியாவில் சம்பவம்!
|
|