ப்ளோரிடாவில் துப்பாக்கித் தாக்குதல் – 5 பேர் உயிரிழப்பு!

ப்ளோரிடாவில் உள்ள வங்கி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சந்தேகத்துக்குரியவர் ஸீபன் சேவியர் என்ற 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கித் தாக்குதலில் வங்கியிலிருந்த மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டமைக்கான காரணம் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
Related posts:
ஜப்பானை தாக்கவுள்ள சூறாவளி: விமானங்கள் இரத்து!
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்!
கென்யாவில் பேருந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு!
|
|