போர் பிரகடனம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவித்தது ஈராக்!
Monday, December 11th, 2017
ஐ.எஸ் தீவிரவாதிகள் மீதான போர் பிரகடனம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக ஈராக் அறிவித்துள்ளது.விசேட ஊட சந்திப்பொன்றின் ஊடாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட போர் பிரகடனத்தின் பிரகாரம் ஈராக் மற்றும் சிரிய எல்லைகள் தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக ஹைதர் அல் அபாடி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈராக் மற்றும் அண்டைய நாடுகளின் நிலப்பிரதேசங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதுடன், அந்த நிலப்பரப்புக்களில் இருந்த பாரம்பரியமான வரலாற்று தளங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!
டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம்!
உலகில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது!
|
|
|


