போராட்டங்களை கட்டுப்படுத்த பிரான்ஸில் கடுமையான சட்டத்திருத்தம்!
Wednesday, January 9th, 2019
அரச எதிர்ப்பு போராட்டங்களைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.
அந்த நாட்டின் பிரதமர் எடோர்ட் ஃபிலிப்பே இதனைத் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான சட்ட வரைவு விரைவில் வெளிப்படுத்தப்படும்.
போராட்டங்களில் குழப்பவாதிகளை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை இடம்பெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அந்தநாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து 7 வாரங்கள் போராட்டம் நடத்தப்படுகின்றது.
இந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளால் இதுவரையில் 7 பேர் மரணித்ததுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டைம் இதழில் இடம்பிடித்த தமிழர்!
73 விமானங்கள் மற்றும் ஆயுதங்கள் அழிப்பு - அமெரிக்கா மீது தலிபான்கள் கடும் குற்றச்சாட்டு!
இந்தியாவில் முதன்முறையாக பழங்குடி இனப் பெண் ஒருவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்பு!
|
|
|


