போயிங் நிறுவனத்திடமிருந்து 80 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள ஈரான் அரசு!
Monday, December 12th, 2016
ஈரானின் தேசிய விமான நிறுவனமனாது போயிங் நிறுவனத்துடன் 80 விமானங்களை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு ஓர் அமெரிக்க நிறுவனத்துடன் இரான் மேற்கொள்ளும் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த ஒப்பந்தம் மூலம் 50 போயிங் 737 விமானங்களும், 30 போயிங் 777 விமானங்களும் வாங்கப்பட உள்ளன.
பல தசாப்தங்களாக இரான் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டிருந்ததால் அந்நாட்டின் பழைய விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்துள்ளன.
கடந்தாண்டு ஒப்பந்தத்தின்படி பொருளாதாரத் தடைகளிலிருந்து நிவாரணம் பெற அணுஆயுத திட்டங்களின் ஒரு பகுதியை இரான் கைவிட ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பதற்குமுன் இந்த விமான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஞெயல்படுத்தஇரான் விரும்புவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
|
|
|


