போப் பயணித்த வாகனம் அதிக தொகைக்கு ஏலம்
Saturday, April 2nd, 2016
கடந்த ஆண்டு போப் பிரான்சிஸ் அமெரிக்கா சென்றபோது பயன்படுத்திய வாகனம் ஒன்று மூன்று லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
அந்தக் கறுப்பு நிற ஃபியட் ஹாட்ச்பேக் வாகனத்திலேயே போப் நியூயார்க் நகரம் முழுவதும் பயணித்தார்.இணையதள ஏலம் மூலம் அந்த வாகனம் விற்கப்பட்டபோது, அதன் சாதாரண விலையை விட பன்னிரெண்டு மடங்கு அதிகமான விலைக்கு அது விற்பனையானது.
அந்த வாகனத்தை கார்கள் மற்றும் மோட்டர்பைக்குகளை வாங்கி சேகரிக்கும் கோடீஸ்வர வர்த்தகரான மைல்ஸ் நடால் விலைக்கு வாங்கினார்.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அளிக்கப்படவுள்ளன.
Related posts:
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
மண்சரிவு - கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 24 வரை மருத்துவ அவசரநிலை தொடரும் – பிரான் அரசு அறிவிப்பு...
|
|
|


