போதைக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொல்ல தயார் – டுடெர்டோ!

Friday, September 30th, 2016
எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்துள்ளார்.

நாஜி ஜெர்மனியில் அடோல்ஃப் ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக செய்த இனப் படுகொலையோடு, போதை மருந்துக்கு எதிரான தன்னுடைய போரை சர்ச்சைக்குரிய இந்த தலைவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ஈவு இரக்கமில்லாத டுடெர்டோவின் அசாதாரண தரத்தை கூட மிஞ்சும் அளவுக்கு இந்த கருத்து இருப்பதாக பிபிசியின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.இந்த கருத்துக்களுக்கு அமெரிக்காவிலுள்ள யூதக் குழுக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

டுடெர்டோ அதிபராக பதவியேற்ற மூன்று மாதங்களில், காவல் துறையினரின் நடவடிக்கைகளாலும், கண்காணிப்பாளர்களாலும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.தன்னுடைய போதை மருந்துகளுக்கு எதிரான நேர்மையான பரப்புரையை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விமர்சித்திருப்பது, அவற்றின் போலித்தனத்தை காட்டுகிறது என்று கூறி டுடெர்டோ குறிப்பிட்டுள்ளார்.

_91456483_7ce0d8f3-7d04-4c7f-8fc2-903331c62aea

Related posts: