பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த ஜார்ஜ் பிலாய்ட்க்கு கொரோனா தொற்று – சர்வதேச ஊடகங்கள் தகவல்!
Thursday, June 4th, 2020
அமெரிக்காவில் சமீபத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் மினஸோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரத்தில் கடந்த வாரம் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிலாய்ட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார், அவரை பொது இடத்தில் கழுத்தின் மீது காலால் நெரித்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள கருப்பின மக்கள் வெகுண்டெழுந்து ஒரு வாரகாலத்திற்கு அதிகமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியானது அமெரிக்க மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


