பொறுப்புக் கூறவேண்டும் அமெரிக்கா – ஈராக் !

சிரியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரச ஆதரவுப் படை வீரர்கள் 22 பேர் பலியானதைத் தொடர்ந்து, சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக் குற்றஞ்சாட்டியுள்ளது.
சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிரிய ௲ ஈராக்கிய எல்லையினருகே நேற்று முன்தினம் இரவு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், சிரிய நாட்டினர் அல்லாத சிரிய அரசின் ஆதரவு பெற்ற வெளிநாட்டு படை வீரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருந்தார்.
சிரிய – ஈராக்கிய எல்லை அருகேயுள்ள அல்-ஹரி எனும் இடத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் சிரிய ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது
Related posts:
தமிழகத்தின் துணை முதல்வர்?
சிம்பாப்வே அரச வானொலி யை கைப்பற்றியது இராணுவம்!
2021 இல் ஏவுகணை மூலம் விண்வெளிக்கு இந்தியர்!
|
|