பொருளாதார நெருக்கடி – கானா ஜனாதிபதி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம்!

மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதையடுத்து அங்கு அரசுக்கெதிரான மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அங்கு நிலவிய பொருளதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கானா நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் அவர்கள் அந்நாட்டு ஜனாதிபதி நானா அகுஃபோ-அட்டோ பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
பொருளாதாரத்தை சீரமைக்க சர்வதேச நாணய நிதியத்துடன் கானா அரசு நடத்தும் பேச்சுவார்த்தை கேலிக்கூத்தானது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நடராஜன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு!
ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கி சூடு - 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!
|
|