பொருளாதரத்தில் பிரித்தானியாவை வீழ்த்தியது இந்தியா!

100 ஆண்டுகளுக்குப் பின் பொருளாதாரத்தில் பிரித்தானியாவை வீழ்த்தி இந்தியா முன்னுக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் 2 மற்றும் 3-வது இடங்களில் சீனா, ஜப்பான் நாடுகளும் 4 மற்றும் 5-வது இடங்களில் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் உள்ளன.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்வது மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்தியா இப்பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவீதமாக இருக்கும் என்றும், அதே நேரம் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.8 சதவீதத்தில் இருந்து 1.1. சதவீதமாக சரியும் என கணிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பார்சிலோனா பயங்கரவாதிக்கு சிறையில் கொலை மிரட்டல்!
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி மரணம்!
|
|