பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மறுப்பு!

Sunday, August 13th, 2017

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மீது அமெரிக்கப் படையினர் வான் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுவதை அமெரிக்க இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின்போது, சுமார் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குகின்றனர் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள அமெரிக்கப் படையினர், பொதுமக்கள் கொல்லப்படவில்லை எனவும் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.

வாகனமொன்றில் பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் ஏற்றியதை அவதானித்த நிலையில், அந்த வாகனத்தின் மீதே வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

Related posts: