பேருந்து விபத்து – பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!
Sunday, July 23rd, 2023
பங்களாதேஷின் பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் 35 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்து குறித்து அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எகிப்தியத் தீவுகளை சவுதிக்கு கொடுக்கும் உடன்பாடு செல்லாது !
சென்னையில் வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட 90 கோடி ரூபா!
‘யுனிசெப்’ நல்லெண்ணத் தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம்!
|
|
|


