பேருந்து விபத்து – தென்னாபிரிக்காவில் 20 பேர் உயிரிழப்பு!

தென்னாபிரிக்காவில் பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றையதினம் நேர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வைரச் சுரங்க அகழ்வு பணிகளுக்காக தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் பாரவூர்தியொன்றுமே இவ்வாறு மோதுண்டுள்ளது.
பாரவூர்தியின் சாரதி சாரதி அனுமதி பத்திரமின்றி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் செளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை!
பதுரலிய மண்சரிவினால் சுமார் 05 வீடுகள் புதையுண்டதில் இருவர் பலி!
பாடாசாலை மைதானத்தில் வெடிப்புச் சம்பவம் - காயமடைந்த மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
|
|