பேருந்து – லொரி மோதி கோர விபத்து – 50 பேர் உயிரிழப்பு!
Wednesday, December 26th, 2018
காங்கோ குடியரசு நாட்டில் லொரியுடன் பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசு நாட்டில் சாலைகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலை விபத்துகள் பெருகி வருகின்றன.
இந்த விபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சிகிச்சை பெற்றுவரும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related posts:
ஆயுததாரிகளால் சிறைச்சாலை உடைத்து 28 பேர் விடுவிப்பு!
மாற்றங்களைக் கொண்டுவராவிட்டால் கணவருக்கு ஆதரவு இல்லை - நைஜீரியா அதிபரின் மனைவி!
பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை!
|
|
|


