பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 பேர் பலி : சிம்பாப்வேயில் சோகம்!

சிம்பாப்வேயில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்களில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 பேர் காயடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ள பிட்பிரிட்ஜ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது குறித்த பேருந்து திடீரென தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வைத்திருந்த எரிவாயு குப்பியினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அடையாளம் காண முடியாத அளவிற்கு சில உடல்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை!
சீனாவில் 27 வெளிநாட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு - சீன வெளிவிவகார அமைச்சு !
மெக்ஸிகோவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி !
|
|